[embedyt] https://www.youtube.com/watch?v=gd6E2XgRoww[/embedyt]

ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள படம் ‘ஆடை’. படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு. இந்தப் படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவில், பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.

பெண் ஒருவர் ஆடையில்லாமல், ஒரு இடத்தில் மாட்டிக் கொள்கிறார். அங்கிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்ற பின்னணியில் இந்தக் கதை அமைக்கப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியது.

இந்நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசரின் கடைசிக் காட்சியில் நடிகை அமலாபால் ஆடையின்றி நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு தணிக்கைக் குழு ‘A’ சான்றிதழ் அளித்துள்ளது.