இந்தி ‘ஆடை’ ரீமேகில் அமலா பால் கதாபாத்திரத்தில் கங்கணா ரணாவத்…?

ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்த படம் ‘ஆடை’. இந்த படம் ஹீரோயினை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் .கடந்த ஜூலை 19-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்தே சில எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் கிளம்பிய வண்ணம் இருந்தது.

இந்நிலையில், இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் ரத்னகுமார். பிரபல தயாரிப்பாளர் மகேஷ் பட், இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அமலா பால் கதாபாத்திரத்தில் நடிக்க கங்கணா ரணாவத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

கார்ட்டூன் கேலரி