ஜனவரி 3ம் தேதி நடைபெறும் குரூப் 1 தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: வரும் ஜனவரி 3ம் தேதி நடைபெற உள்ள குரூப் 1 தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2021ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி வரும் 3ம் தேதி குரூப் 1 தேர்வு கிட்டத்தட்ட 856 மையங்களில் நடைபெற உள்ளது. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் மே மாதம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந் நிலையில், குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட் http://tnpsc.gov.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வாளர்கள் ஆதார் எண் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும்.

அதாவது நிரந்த பதிவில் ஆதார் எண் பதிவு செய்திருந்தால் மட்டுமே விண்ணப்பதாரர்கள் ஹால் டிக்கெட் பெற முடியும். எனவே தேர்வாளர்கள் அனைவரும் ஆதார் எண்ணை விரைவில் இணைக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.