டில்லி,

ரசு திட்டங்கள், வங்கி சேவைகள், மொபைல் போன் இணைப்பு போன்ற அனைத்துவிதமான சேவைகளுக்கும் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு உச்ச நீதி மன்றத்தில் அரசியல் சாசன அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதில், ஆதார் இணைக்க வேண்டும் என மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது என மத்திய அரசுக்கு  அரசியல் சாசன அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

டிசம்பருக்குள் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் ஆதார் எண் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. தற்போது அதற்கான கால அவகாசத்தை  மார்ச் 2018 வரை நீட்டித்துள்ளது.

ஏற்கனவே, மத்திய அரசின் ஆதார் இணைப்பு உத்தரவுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பல வழக்குகளும் தொடரப்பட்டன.

அரசியல் சாசனப்படி  தனி மனிதரின் ஆதாரமான,  ஆதார் எண்ணை இணைக்க சொல்வது தவறு என்று உச்ச நீதி மன்றத்தில்பல்வேறு தரப்பினர் வழக்கு தொடுத்து உள்ளனர்.

 

இந்த வழக்குகளும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வின் முன் விசாரிக்கப்பட்டு வந்தன.

நேற்றைய  விசாரணையின்போது,  மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணு கோபால் ஆஜராகி, வங்கிக்கணக்குகள் உள்ளிட்டவற்றில் ஆதார் எண் இணைப்பதற்கு டிசம்பர் 31-ந் தேதி கடைசி நாள் என்பதை 2018-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது என்பதை தெரிவித்தார்.

அதை ஏற்றுக்கொண்ட நிதிபதிகள்,  அரசு நலத்திட்டங்களை பெற ஆதார் எண்ணை இணைக்க மக்களை கட்டாயப்படுத்த கூடாது என மத்திய அரசுக்கு அரசியல் சாசன அமர்வு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, வரும் ஜனவரி மாதம் 17-ந் தேதி முதல் தொடர்ந்து விசாரிக்கும் என்றும் அதன்பிறகே இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்து உள்ளது.