இந்த சேவைகளுக்கு ஆதார் எண் கட்டாயம்: உச்சநீதி மன்றம் தீர்ப்பு

--

டில்லி:

அரசின் அனைத்துவிதமான நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிரான வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது.

எந்த திட்டமாக இருந்தாலும் ஆதாரை கட்டாயப்படுத்தக் கூடாது என்று கூறி உள்ள உச்சநீதி மன்றம்,  ஆதார் அட்டை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது என்றும், ஆதார் இல்லை என்பதற்காக அடிப்படை உரிமைகள் மறுக்கப்படக்கூடாது “என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு மானியம் தொடர்பான  சலுகைகள் பெற ஆதார் கட்டாயம், 

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம்.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம்

தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை பெற முடியாது

விளிம்புநிலை சமூகத்துக்கு ஆதார் பெறும் அளவில் பயன் அளிப்பதை ஒப்பிட்டுப் பார்த்தால், அதனால் உண்டாகும் எதிர்மறை விளைவுகள் குறைவு தான்.

நீதிபதி சிக்ரி கூறிய தீர்ப்பில், ஆதார் அட்டை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது  எனவும் போலியாக ஆதாரை உருவாக்க முடியாது  எனவும் தெரிவித்துள்ளார்.

தார், மற்ற ஆவணங்களை போன்றதல்ல  என்று கூறிய  நீதிபதி சிக்ரிசிறந்ததாக இருப்பதை விட தனித்துவமாக இருப்பதே மேல் என்றும்,  ஒருவருக்கு கொடுக்கப்படும் ஆதார் அடையாள அட்டையை வேறு ஒருவருக்கு கொடுக்க முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் அதிகமாக பேசப்படும் ஒன்றாக ஆதார் மாறி இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது/

இந்திய அரசால் வழங்கப்பட்டு வரும் பான் கார்டு ஏற்கனவே கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளால் பாதுகாக்கப்பட்டு வருவதால், அதற்கு மட்டும் உச்சநீதி மன்றம் ஆதார் இணைக்க கட்டாயப்படுத்தி உள்ளது.

வேறு எந்தவிதமான தனியார் சேவைகளுக்கும் ஆதார் கொடுக்க தேவையில்லை என்றும் தெரிவித்தும்உள்ளது.