டிபி நோயாளிகள் நிவாரண நிதி : ஆதார் அவசியம்

டில்லி

த்திய அரசால் வழங்கப்பட்டு வரும் டிபி நோயாளிகளுக்கான நிவாரண நிதியைப் பெற ஆதார் அட்டை எண் கட்டாயமாக்கப்படுள்ளது

டிபி நோயாளிகளுக்கு நிவாரண நிதி மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.  இந்த நிதியைப் பெற ஆன்லைனில் நிக்‌ஷய் என்னும் படிவம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.  அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறும் எல்லா நோயாளிகளும் நிக்‌ஷய் மூலம் பதிவு செய்யப்பட வேண்டும்.

இப்போது அரசு நிக்‌ஷய் மூலம் பதிவு செய்ய ஆதார் எண் அவசியம் என ஆறிவித்துள்ளது.  ஒரே நோயாளியின் பெயர் பலமுறை பதிவு செய்யப் பட்டு முறைகேடுகள் நடைபெறும் என அஞ்சப்படுவதால் ஆதார் எண் கட்டாயமாக்கப் பட்டுள்ளது எனத் தெரிகிறது.

இதுவரை ஆதார் அட்டை பெறாத நோயாளிகள் புது ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்து விண்ணப்ப நகலை வாக்காளர் அடையாள அட்டை போன்ற சான்றிதழுடன் இணைத்து பதியலாம்.  ஆனால் ஆகஸ்ட் 31க்குள் ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கு பல ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பிய போதும் அரசு தன் முடிவை மாற்றிக் கொள்வதாக இல்லை