நாடே எதிர்பார்க்கும் ‘ஆதார்’ வழக்கு: உச்சநீதி மன்றம் நாளை தீர்ப்பு

டில்லி:

நாடே எதிர்பார்துக்கொண்டிருக்கும்  ஆதார் வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை காலை தீர்ப்பு வழங்க இருப்பதாக அறிவித்து உள்ளது.

நாட்டின் அனைத்துவிதமான பரிவர்த்தனைகளுக்கும்ஆதார் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், அதை எதிர்த்து  தொடரப்பட்ட வழக்கை உச்சநீதி மன்ற அரசியல் சாசன பெஞ்ச விசாரித்து வந்தது.

இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை, ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலகெடுவை நீடிப்பதாக உச்ச நீதிமன்றம் ஏற்கனஅவ அறிவித்த நிலையில்,   நாள  இறுதித்தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

ஆதாரை கட்டாயமாக்குவது குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில்,  அரசின் மானியம் பெறும் சமூக நலத்திட்டங்களுக்கு மட்டும் ஆதார் அவசியம் என்று நீதிபதி தெரிவித்தார். அத்துடன், ஆதார் எண்ணை  இப்போது இணைக்க வேண்டியது கட்டாயமில்லை என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் நாளை ஆதார் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.