டில்லி:

ள்ள ஓட்டு மற்றும் ஒரே வாக்காளர் பெயர் பல வாக்குச்சாவடிகளில் இடம்பெறுவது போன்ற தவறுகளை தவிர்க்கும்  வகையில், வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது குறித்து சட்ட அமைச்சகம் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் ஆதார் எண்ணுடன், வங்கி, சமையல் எரிவாயு, வருமான வரி போன்று பல்வேறு கணக்குகளுடன் இணைக்கப்பட்டு உள்ள நிலையில், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் சமூக வலைதள கணக்குக்கும் ஆதார் எண் இணைக்கப்பட பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக அரசியல் கட்சிகளும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.

இநத் நிலையில்,  கள்ள ஓட்டு போடுவதை தவிர்க்கும் வகையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு சட்டரீதியான ஆதரவு கேட்டு தேர்தல் ஆணையம் சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை அனுப்பி உள்ளது. இந்த பரிந்துரையை  சட்ட அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தனது தனிப்பட்ட கருத்தாக,  ‘‘வாக்காளர் அடையாள அட்டை தேர்தல் ஆணைய இணையதளத்துடன் தொடர்பு கொண்டது. வாக்குச்சாவடி தகவல் உள்ளிட்ட விபரங்களை தெரிந்து கொள்ள இது உதவுகிறது. இதற்கும் ஆதாருக்கும் தொடர்பு இல்லை. ‘‘வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது தேவையற்றது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.