டில்லி,

ங்கிகளில் புதிய கணக்கு தொடங்குபவர்கள் ஆதார் எண் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

ஏற்கனவே மத்திய அரசின் சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. கேஸ் இணைப்பு, இன்சூரன்சு போன்ற பெரும்பாலான சேவைகளில் ஆதார் எண்ணை இணைக்க மத்தியஅரசு வலியுறுத்தி உள்ளது.

இந்நிலையில் தற்போது வங்கி கணக்குகளில் ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

மேலும் 50 ஆயிரத்துக்கு மேல் பண பரிமாற்றம் செய்யும்போது ஆதார் எண் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.

ஏற்கனவே வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த ஆண்டு டிசம்பர் 31ந்தேதிக்குள் ஆதார் எண்ணை வங்கியில் சமர்ப்பிக்கவும் கெடு விதித்துள்ளது.

கடந்த வாரம்  உச்சநீதி மன்றத்தில், பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைக்கும் விவகாரம் குறித்த வழக்கில், உச்சநீதி மன்றம், மத்திய அரசுக்கு, ஆதார் கார்டை பயன்படுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது வங்கி கணக்குக்கு ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.