டில்லி,

விவசாயிகள் வட்டி மானியத்துடன் பயிர்க்கடன் பெறுவதற்கு  வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு 3 லட்சம் ரூபாய் வரையுள்ள பயிர்க்கடன்கள் 7 விழுக்காடு வட்டி விகிதத்தில் வழங்கப்படுகின்றன. ஓராண்டுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டிய இந்தக் கடனை உரிய காலத்தில் அடைத்துவிட்டால் 3 விழுக்காடு வட்டி விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே வட்டி மானிய மாகச் செலுத்தப்படும்.

தங்க நகைகளை அடகு வைப்பதுடன் நிலப் பட்டா நகல், பயிரிட்டுள்ள விவரங்கள் அடங்கிய ஆவணம் ஆகியவற்றை வங்கிகளில் கொடுத்தே இத்தகைய பயிர்க் கடனை விவசாயிகள் பெற்று வந்தனர். இந்நிலையில் வட்டி மானியத்துடன் கூடிய பயிர்க்கடனைப் பெற வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை விவசாயிகள் கட்டாயமாக இணைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

அத்துடன் ஒரே நிலத்தின் பெயரில் பல முறை கடன் பெறுவதைத் தவிர்ப்பதற்காக, நிலப் பட்டா நகலையும் வங்கிகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

இதன் காரணமாக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.