டில்லி,

சொத்துகளை வாங்க, விற்‌க ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அ‌றிவித்து உள்ளது.

ஆதார் குறித்த வழக்கு உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு, நிலுவையில் உள்ள நிலையில் மத்தியஅரசு ஆதார் குறித்து தினசரி ஒரு அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட எதிர்த்து வந்த பாரதியஜனதா தற்போது அனைத்து வகையான பரிவர்த்தனைக்கும் ஆதாரை கட்டாயப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், டில்லியில் நடைபெற்ற  நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆதார் திட்ட‌த்தின் தலைமை‌ செயல் அதிகாரி அஜய் பூ‌ஷண் பாண்டே சொத்துக்கும் ஆதார் கண்டிப்பாக தேவை என்று கூறி உள்ளார்.

நாடு முழுவதும் சொத்துக்கள் வாங்கவோ, விற்கவோ இனிமேல் ஆதார் கட்டாயம் என்றும், சொத்துகள்‌ தொடர்பான வழக்குகளைத் ‌தீர்க்க ஆதார் எண்‌ பேருதவியாக இருக்கும் என்றும் கூறி உள்ளார்.

மேலும்,  ஆதாரில் கருவிழிகள் பதிவு செய்ய‌ப்பட்டிருப்பதால், சொத்துகளை வாங்குவது மற்றும் விற்பதில் நடக்கும் முறைகேடுகளை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

இதன் காரணமாக இனிமேல் ஒவ்வொருவருக்கும்  ஆதார் இல்லை என்றால் ஆதாரமே இல்லை என்ற நிலை உருவாகும் நிலை ஏற்பட்டு வருகிறது.