பான், ஆதார் எண் இணைப்புக்கு 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அவகாசம்: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: பான், ஆதார் எண் இணைப்புக்கு 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் வழங்கியுள்ளது.

மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரையில் நீட்டிக்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஆதாரை பான் எண்ணுடன் இணைக்காத நபர்களுக்குக் கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது. இதுவரை இவற்றை இணைக்காமல் இருப்பவர்கள் இந்த அவகாசத்தைப் பயன்படுத்தி இணைக்கலாம்.முன்னதாக இந்த ஆண்டின் மார்ச் 31 வரையிலும், பின்னர் ஜூன் 31 வரையிலும் நீட்டிக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.