டெல்லி:

பான் கார்டு உடன் ஆதார் கார்டு இணைக்கும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், 2020ம் ஆண்டு  மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

வருமான வரி தாக்கலுக்கு பான் கார்டுடன், ஆதார் எண் இணைப்பது கட்டாயம் மற்றும்  அரசு திட்டங்களின் சலுகைகள் பெறவும் ஆதார் எண் கட்டாயம் என்று அரசு மத்தியஅரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதற்கான கால அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், பான் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைப்பதை வருமான வரித்துறை கட்டாயமாக்கியுள்ளது.

‘இதற்கான கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 31 ஆம் தேதி கடைசி தேதியாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தற்போது அதற்கான கால அவகாசத்தை 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக  மத்திய அரசு அறிவித்துள்ளது.