டில்லி:

உலகின் மிகப்பெரிய அடையாள தகவல்களாக ஆதார் விளங்குகிறது. கோடி கணக்கான மக்களின் தனிப்பட்ட விபரங்கள் மற்றும் அடையாளங்களை இது கைவசம் கொண்டுள்ளது. ஆனால், இந்த தீவிரமான ரகசிய தகவல்கள் சமூக விரோதிகள் மற்றும் 3ம் நபர்கள் கையில் கிடைக்கும் வகையில் அரசு மெத்தனமாக செயல்படுகிறது.

210 அரசு இணையதளங்கள் வெளிப்படையாக பல ஆதார் விபரங்களையும், முகவரிகளையும் வெளியிட் டுள்ளன. ஆதார் வழங்கும் நிறுவனமான யுடிஏஐ பின்னர் இதை கண்டறிந்து நீக்கியுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் இது வெளிச்சத்துக்கு வந்த பின்னர் தான் ஆதார் தகவல்கள் கசிந்ததும், பின்னர் நீ க்கிய தகவலும் வெளி உலகத்துக்கு தெரியவந்தது.

அந்த நிறுவனம் ஆதார் தகவல்களை ரகசியமாக பாதுகாக்க தவறிவிட்டது. ஆதார் தகவல்கள் எங்கு பயன்படுத்தப்படுகிறது என்ற விபரம் அந்த நிறுவனத்திற்கே தெரியவில்லை. இந்த கசிவு காரணமாக எத்தனை தனி நபர் பாதித்துள்ளனர் என்ற விபரம் தெரியவில்லை. ஆதார் விதிமீறல் தொடர்பாக ஒரு வழக்கு கூட எங்கும் பதிவு செய்யப்படவில்லை. இதற்கு யுடிஏஐ தான் பதில் கூற வேண்டும்.

ஆதார் தகவல்கள் கசிவது இது முதன்முறையல்ல. ஏற்கனவே கடந்த மே மாதத்தில் 130 மில்லியன் ஆதார் தகவல்கள், வங்கி விபரங்கள் கசிந்துவிட்டதாக செய்தி வெளியானது. இதனால் ஒரே நாளின் 10 சதவீத இந்தியர்களின் வங்கி கணக்குகளில் மோசடி செய்யப்பட்டது. அடுத்து இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் 1.4 மில்லியன் பேரின் ஆதார் தகவல்கள் கசிந்தது.

இந்த கசிவு தகவல் தெரிந்தும் அதை பல நாட்கள் சரி செய்யாமல் அரசு அதிகாரிகள் அலட்சியமாக இருந்தனர்.இதன் மூலம் 35 லட்சம் பென்சனர்களின் தனி நபர் விபரங்கள் கசிந்துள்ளது. இந்த தகவல்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இணையதளங்களில் வெளியிடப்பட்டிருந்தது.

ஆதார் தகவல்கள் கசிவது மோசடி ஆசாமிகளுக்கு சவுகர்யமாக அமைந்துவிடுகிறது. இந்த தவறுகளுக்கு அரசு சுரணையற்றத் தன்மையுடன் பதிலளிப்பது அதிர்ச்சியாக உள்ளது. அதிகாரிகள் பலருக்கு தாங்கள் செய்யும் தவறு தெரியாமல் உள்ளது. அவர்கள் கசிவு குறித்த தகவலையே அறியாமல் இருக்கின்றனர்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அறிந்து பின்னர் அது மீடியாவில் வெளியானால் தான அதிகாரிகளுக்கு தெரிய வருகிறது. முக்கியமான தகவல்களை பாதுகாக்கும் அமைப்பாக உள்ள அரசாங்கத்தின் செயல்பாடின்மை மற்றும் தவறுகளால் நாட்டு மக்களுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.