க்னோ

த்திய அரசு அனைத்து நலத் திட்டங்களுக்கும் ஆதார் அவசியம் ஆக்கி உள்ளது.   இந்த ஆதார் இணைப்பு வங்கிக் கணக்குகள் மற்றும் மொபைல் எண்ணுக்கும் அவசியம் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.  கல்வித் துறையைப் பொறுத்த வரையில் மதிய உணவு சாப்பிடும் அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் எண் என அரசு தெரிவித்துள்ளது.

தற்போது பா ஜ க வின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்திரப் பிரதேச அரசு  தற்போது 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.   அரசு அனைத்து மாவட்ட கல்வி நிர்வாகத்துக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அந்த சுற்றறிக்கையில், “வரும் 2018ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதத்துக்குள் அனைத்து 10ஆம் வகுப்பு, மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களும் ஆதார் கார்டு வாங்க வேண்டும்.   தேர்வுக்கு வரும் போது ஆதார் கார்டு அவசியம் எடுத்து வர வேண்டும்.   ஆள் மாறாட்டத்தை தடுக்க ஆதார் அவசியம் ஆக்கப்பட்டுள்ளது.   ஆதார் இல்லாமல் போனால் தேர்வு எழுத முடியாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.