வருமான வரி தாக்கலுக்கு ஆதார் கட்டாயம்!!

டெல்லி:

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நிர்ந்தர கணக்கு எண் (பான்) பெறவும் ஆதாரை அவசியமாகிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆதார் சமர்பிப்பது படிப்படியாக கட்டாயாமாக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே சமையல் காஸ் இணைப்பு, பொது விநியோகதிட்டம், தேசிய சமூக உதவி திட்டங்கள் உள்ளிட்ட 84 அரசு திட்டங்களுக்கு ஆதார் அவசியமாகிவிட்டது.

இந்நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த நிதியாண்டுக்கான வருமான வரித் தாக்கலில் இது அமலுக்கு வரும். மேலும் ஆதார் எண்ணையும் பதிவு செய்வதன் மூலம், வரி செலுத்துவோரின் ‌வங்கிக் கணக்கு விவரங்கள், நிதி செயல்பாடுகள் எளிதாக‌ பின் தொடர வாய்ப்பு ஏற்படும்‌. இதற்கான வருமான வரிப் படிவத்தில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு அடுத்த நிதியாண்டு முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு வட்டார தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் நிர்ந்தர கணக்கு எண் (பான்) பெற விண்ணப்பிக்கும் போது ஆதார் இணைக்கப்பட வேண்டும் என அரசு விதிமுறைகளை மாற்றி அமைக்கிறது. வருமான வரிப் படிவத்தில் கணக்கு தாக்கல் செய்பவரின் வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டியது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது.ன் தொடர வாய்ப்பு ஏற்படும்‌. இதற்கான வருமான வரிப் படிவத்தில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு அடுத்த நிதியாண்டு முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு வட்டார தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் நிர்ந்தர கணக்கு எண் (பான்) பெற விண்ணப்பிக்கும் போது ஆதார் இணைக்கப்பட வேண்டும் என அரசு விதிமுறைகளை மாற்றி அமைக்கிறது. வருமான வரிப் படிவத்தில் கணக்கு தாக்கல் செய்பவரின் வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டியது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது.