தனிமனித சுதந்திரமா? ஆதார் எண்ணா? இன்று என்ன சொல்லப்போகிறது உச்சநீதி மன்றம்?

டில்லி:

னி மனித சுதந்திரம் முக்கியமா அல்லது ஆதார் எண்தான்  கட்டாயமா? .. . இன்று தீர்ப்பு வழங்க உள்ள உச்சநீதி மன்றம் என்ன சொல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து உள்ளது.

அரசின் அனைத்துவிதமான நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்தது. வங்கி கணக்கு. மொபைல்போன் சிம்கார்டு உள்பட அனைத்து விதமான பரிவர்த்தனைகளுக்கும்  ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் இந்த உத்தவு காரணமாக தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுவதாக எதிர்ப்பு கிளம்பியது.  ஆதார் மூலம் தனி நபரின் விவரங்கள் திருடப்படும் அபாயம் உள்ளதால், ஆதார் அடையாள எண் அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டதோடு,  சிம் கார்டு, வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்க்கான காலகெடுவையும்  நீடித்தது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை  நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமை தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தீர்ப்பு வழங்க உள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது.

இன்றைய தீர்ப்பில் ஆதார் கட்டாயாமா? தனி மனித சுதந்திரம் கட்டாயாமா? என்பது தெரிய வரும்…