விரைவில் நாடெங்கும் 53 நகரங்களில் ஆதார் சேவை மையம்

டில்லி
பாஸ்போர்ட் சேவை மையங்களை போல் நாடெங்கும் ஆதார் சேவை மையங்களை அரசு அமைக்க உள்ளது.


அரசு நலதிட்டங்களைப் பெற அடையாள அட்டையாக ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஆதார் எண்ணை மொபைல் உள்ளிட்டவற்றோடு இணைக்க அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரசு உதவிகள் தவிர மற்றவைகளுக்கு ஆதார் தேவை இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆயினும் பான் கார்டு, வருமான வரிக்கணக்கு ஆகியவற்றுக்கு ஆதார் அவசியமாக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவை ஒட்டி பலரும் ஆதார் கார்டுகளைப் பெறவும் அதில் முகவரி உள்ளிட்ட மாறுதல்கள் செய்யவும் முயன்று வருகின்றனர். இது வரை இத்தகைய சேவைகளுக்காக சுமார் 1 லட்சம் பேர் நாடெங்கும் விண்ணப்பித்துள்ளனர். இந்த ஆதார் அட்டையை வழங்கும் தனி நபர் அடையாள வாரியத்தின் உதய் அமைப்பு இது குறித்துப்அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், “புதியதாக ஆதார் எண் பதிவு செய்துக் கொள்பவர்களுக்கும் ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய விண்ணப்பிவர்களுக்கும் உதவ ஆதார் சேவை மையங்கள் தொடங்கப்பட உள்ளன. நாடெங்கும் உள்ள முக்கிய நகரங்களில் 53ஆதார் சேவை மையங்கள் சுமார் ரூ.400 கோடி செலவில் அமைக்கப் பட உள்ளன. வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆதார் சேவை மையங்கள் தொடங்கப்ட உள்ளன” என அறிவிக்கப்பட்டுள்ளது.