ஆடிக்கிருத்திகை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை:

டிக்கிருத்திகையையொட்டி, காஞ்சிபுரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இந்த ஆண்டின் ஆடிக்கிருத்திகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் நாளை சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெறும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிரபலமான வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நாளை ஆடி கிருத்திகை விழா நடைபெறுவதையொட்டி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.