மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு :  சோனியாவுக்கு ஆதித்ய தாக்கரே அழைப்பு

டில்லி

காராஷ்டிர முதல்வராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவின் பதவி ஏற்கும் விழாவுக்கு சோனியா காந்தியை ஆதித்ய தாக்கரே நேரில் சென்று அழைத்துள்ளார்.

 

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனாவின் முதல்வர் பதவி  பங்கீட்டுத் திட்டத்துக்கு பாஜக ஒப்புக கொள்ளாததால் கூட்டணியில் பிளவு ஏற்பட்ட்து.   அக்கட்சி தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி நடத்த முடிவு செய்த போது பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராகவும் தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உடனடியாக தேவேந்திர பட்நாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட வேளையில் அஜித் பவார்  பதவியை ராஜினாமா செய்து தாய்க்கட்சிக்கு திரும்பினார்.   எனவே தேவேந்திர பட்நாவிஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.   அதைத் தொடர்ந்து இன்று சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.   முதல்வராக அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இன்று பதவி ஏற்கிறார்.

 

இன்று மாலை சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் நினைவிடமுள்ள மும்பை சிவாஜி பூங்கா மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது.   இந்த விழாவுக்கு வருகை தருமாறு சிவசேனா கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினரும் முதல்வராக பதவி ஏற்க உள்ள உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்ய தாக்கரே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் அவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.

You may have missed