பிக்பாசிலிருந்து வெளியேறிய பின் ஆஜித் வெளியிட்ட முதல் வீடியோ…..!

92-ம் நாளில் குறைவான வாக்குகளைப் பெற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஆஜித், முதன் முதலாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ’90 நாட்களுக்கு மேலாக நான் பிக்பாஸில் இருந்ததற்கு நீங்கள் அளித்த வாக்குகள் மிகப்பெரிய விஷயம். அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவு மிக நன்றாக இருந்தது. என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் வந்த அனைத்து பதிவுகளையும் நான் பார்த்தேன். எல்லாம் மிக அழகாக இருந்தது. இது போன்ற பதிவுகளை நான் பார்த்து பல வருடம் ஆகிவிட்டது . மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

பிக்பாஸில் இருந்து வெளியே வந்தாலும் மக்களை என்டர்டெய்ன்மென்ட் செய்வதற்காக, இசையால் என்னால் முடிந்ததை நான் செய்து கொண்டே இருப்பேன். இன்னும் அடுத்த நகர்வு பற்றி திட்டமிடவில்லை, இனிமேல் தான் யோசிக்க வேண்டும். ஆனால் நிச்சயம் மக்களை என்டர்டைன்மெண்ட் செய்வேன் என்பதை உறுதியாக கூறுகிறேன். என்னைப் பற்றி வந்த பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கருத்துக்கள் அனைத்தையுமே பார்த்தேன். அந்த கமெண்ட்களில் நான் ஏற்றுக் கொள்ளும்படியான விஷயங்கள் இருந்தால் கண்டிப்பாக அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். மீண்டும் ஒரு முறை எனக்கு ஆதரவு தந்த அனைத்து மக்களுக்கும் நன்றி’ எனத் தெரிவித்திருக்கிறார்.