தலைநகரில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சி: கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின், மம்தா உள்பட தலைவர்கள் வாழ்த்து

டெல்லி:

லைநகர் டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் தேசியக்கட்சிகளை புறந்தள்ளிவிட்டு, மாநிலக் கட்சியான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சியை மீண்டும் தேர்வு செய்துள்ளனர்.  3வது முறையாக முதல்வராக பதவி ஏற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்:

டெல்லி தேர்தலில் மக்கள் ஆம்ஆத்மி கட்சிக்கு மீண்டும் அமோக வெற்றியை கொடுத்துள்ளனர். மீண்டும் ஆட்சி அமைக்கும் அரவிந்த்கேஜ்ரிவால் மற்றும் ஆம்ஆத்மி கட்சியினரை வாழ்த்துகிறேன்.

இந்த தேர்தல் முடிவு பாஜக வகுப்புவாத அரசியலைத் தூண்டுகிறது என்பததை தெளிவாக நிரூபித்து உள்ளது.

கூட்டாட்சி உரிமைகள் மற்றும் பிராந்திய அபிலாஷைகள் நம் நாட்டின் நலனில் பலப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

‘நான் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டேன், மக்கள் பாஜகவை நிராகரித்து விட்டனர். வளர்ச்சி மட்டுமே பேசும், என்.ஆர்.சி., என்.பி.ஆர், சிஏஏ வேலைக்கு ஆகாது. இவற்றையும் டெல்லி மக்கள் நிராகரித்து விட்டனர்’ என்றார்.

ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் மனோஜ் ஜா 

‘டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு அறிவிப்பது என்னவெனில் விஷம் கக்கும் பிரச்சாரங்கள் அறிக்கைகளால் எந்த ஒரு பயனும் இல்லை என்பதையே, டெல்லி மக்கள் ஆம் ஆத்மி சார்பாக அளித்த தீர்ப்பு எங்களுக்கு ஏமாற்றமளிக்கவில்லை’

பாஜகவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர்

‘அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் டெல்லி வளர்ந்திருக்கிறது என்றே நம்புகிறேன், பாஜக முயன்று பார்த்தது ஆனால் மக்களை திருப்தி செய்ய முடியவில்லை’

பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

வாக்காளர்கள்தான் அரசர்கள், அவர்கள்  அதை நிரூபித்து உள்ளனர் என்றார்.

ஆம் ஆத்மியின் தேர்தல் பொறுப்பாளர் சஞ்சய் சிங்

, ‘உங்கள் பிள்ளை கேஜ்ரிவாலை பயங்கரவாதி என்று அழைத்தனர். இன்று மக்கள் அவர் சிறந்த தேசப்பற்றாளர் என்று நிரூபித்து உள்ளனர்… இந்த தேர்தலை இந்துஸ்தான் – பாகிஸ்தான் மேட்ச் என்றனர், இப்போது இந்துஸ்தான் வென்றுள்ளது என்று தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி