ண்டன்

முன்னாள் பாக் கிரிக்கெட் கேப்டன் ஆமர் சோஹைல் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் மறைமுகமாக ஃபிக்ஸிங்கினால் தான் பாகிஸ்தான் ஃபைனல்ஸ் வந்துள்ளது என கூறி உள்ளார்.

ஆமர் சோஹைல் சமீபத்தில் ஒரு பாகிஸ்தான் விளையாட்டுச் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார், அதில் பாகிஸ்தான் டீம் ஃபைனல்ஸ்க்கு வந்தது பற்றி மிகவும் பெருமிதம் அடைய வேண்டாம் எனவும், பல வெளிசக்திகளின் தூண்டுதலினாலேயே ஃபைனல்ஸ் வர முடிந்தது எனவும் கூறினார்.  மேலும் கூறுகையில் உண்மையாக விளையாடி வெற்றி பெற்றிருந்தால் டீமப் பாராட்ட தயக்கம் இல்லை எனவும், இறுதிப் போட்டிக்கு அவர்கள் வரவில்லை, வரவழைக்கப் பட்டார்கள் எனவும் கூறினார்

இதற்கு மேல் இதைப் பற்றி ஏதும் சோஹைல் கூறவில்லை.  ஆனால் கிரிக்கெட் ரசிகர்கள் அவர் மேட்ச் ஃபிக்ஸிங்க் மூலம் தான் பாக் டீம் இறுதிக்கு வந்தது என ஜாடையாக சொல்வதை புரிந்துக் கொண்டனர்.  இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அதுல் வாசன் இதுபற்றிக் கூறுகையில் முழுமையாக சொல்லாத சொற்களுக்கு அர்த்தம் ஏதும் கிடையாது என தெரிவித்தார்.

ஆனால் பாக் வீரர்கள் பலர் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஏற்கனவே சம்மந்தப்பட்டு தண்டனை பெற்றுள்ளதால் சோஹைல் கூற்றை மறுக்க முடியாது என பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு விமரிசகர் கூறினார்.

முன்பு தாவூது இப்ராகிம் பல மேட்சுகளின் முடிவுகளை பாகிஸ்தான் மூலம் மாற்றி இருப்பதால் சோஹைல் கூற்றில் உண்மை இருக்க வாய்ப்புக்கள் அதிகம் என்றே தோன்றுகிறது