பாலிவுட் பிரபலம் ஆமிர்கானுக்கும், அவரது முதல் மனைவி ரீனா தத்தாவுக்கும் பிறந்தவர் ஐரா கான்.
ஐரா கான், டாட்டூ போடக் கற்றுக் கொண்டுள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
“என் ஐந்தாவது ஆசையும் முடிந்தது. எனது முதல் டாட்டூவைப் போட்டு முடித்திருக்கிறேன். நுபுர் ஷிகாரே என்னை நம்பியதற்கு நன்றி. இதைச் சாத்தியமாக்கிய அயர்ன் பஸ் டாட்டூஸுக்கு நன்றி. சுமாராக இருக்கிறது இல்லையா? எனக்கு மாற்றுத்தொழில் இருக்கிறது என நினைக்கிறேன்” என்று பகிர்ந்துள்ளார்.
https://www.instagram.com/p/CGAScOegcw6/
தனக்குப் பயிற்சியளித்தவரின் கரங்களில் நங்கூரம் போன்ற படத்தை ஐரா டாட்டூவாக வரைந்துள்ளார். பல ரசிகர்கள் ஐராவின் திறமையைப் பாராட்டி வருகின்றனர்.