அமிர்கான் மீது கங்கணா ரணாவத் அதிருப்தி : அமீர்கான் ஆச்சரியம்

மும்பை

ன் மீது நடிகை கங்கணா ரணாவத் அதிருப்தி அடைந்துள்ளதை அறிந்து தாம் ஆச்சரியம் கொண்டுள்ளதாக நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்த தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான் படம் சமீபத்தில் வெளியாகியது.   இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.   அதே சமயத்தில் வெளியான நடிகை கங்கணா ரணாவத் நடித்த மணிகர்ணிகா என்னும் ஜான்சி ராணியின் வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் ஓரளவு ஓடியது.

மணிகர்ணிகா திரைப்படம் வெளியாகும் போது தனது படமும் வெளியாவதை அமீர்கான் தடுத்திருக்கலாம் என பாலிவுட் பிரபலங்கள் இடையே கருத்து எழுந்தது.

மணிகர்ணிகா பட கதாநாயகி கங்கணா ரணாவத் தனது படம் சுதந்திர போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லட்சுமி பாய் வரலாற்றை அடிப்படையாக கொண்டது என்பதால் அமீர்கான் அதற்கு ஆதரவு அளித்திருக்கலாம் எனவும் ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை எனவும் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார்.

நேற்று அமிர்கான் தனது பிறந்த நாளை ஊடகவியலாளர்களுடன் எளிமையாக கொண்டாடினார்.   அப்போது செய்தியாளர்கள் கங்கணா ரணாவத் அமீர்கான் மீது அதிருப்தி அடைந்திருப்பதை பற்றி அமீர்கானின் கருத்தை கேட்டனர்.

அதற்கு அமீர்கான், “கங்கணா என் மீது அதிருப்தி அடைந்துள்ளாரா? இந்த செய்தி எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.   அவர் என்னிடம் இது போல எதுவும் சொல்லவில்லை.  நான் அவரை சந்திக்கும் போது இது குறித்து கேட்கிறேன்” என பதில் அளித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி