அனைவரும் தவறாது வாக்களியுங்கள்: அமீர்கானின் பிறந்தநாள் செய்தி!

மும்பை: சமீபத்தில் தனது 54வது பிறந்தநாளைக் கொண்டாடிய பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான அமீர்கான், தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளைக் கொண்டாட தவறாதவர் அமீர்கான். மேலும், தனது பிறந்தநாளின்போது, ஊடகங்களை சந்திக்கவும் தயங்காதவர்.

அந்த வகையில், இந்த 54ம் ஆண்டு பிறந்தநாளையும் தனது மனைவி கிரண் ராவுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார். அதைத் தொடர்ந்து அவர் மீடியாவிடமும் பேசினார்.

இது தேர்தல் ஆண்டாக இருப்பதால், வரும் தேர்தலில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டினுடைய வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து, தேர்லை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

– மதுரை மாயாண்டி