டில்லி மாநகராட்சி தேர்தல்: முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது  ஆம் ஆத்மி

டில்லி:

டில்லி மாநகராட்சி தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களின் பெயர்களை அர்விந்த் கெஜ்ரவால் அறிவித்தார். 272 வார்டுகளைக் கொண்ட டில்லி மாநகராட்சி தேர்தல் அடுத்தமாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளிலும் தற்போது நடைபெற்று வருகிறது.

ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட  10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விருப்பம் தெரிவித்து மனு அளித்தனர்.  இவர்களில் 49 பெண்கள் உட்பட 109 வேட்பாளர்களின் பெயர்களை கட்சியின்  ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரவால் தேர்வு செய்து நேற்று அறிவித்தார்.  கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஆங்கஸ் நரங் மேற்கு படேல் நகரில் போட்டியிடுகிறார்.

 

 

பாஜகவும் காங்கிரஸூம் கடந்த 20 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளில் ஊழல் புரிந்துள்ளதாகவும், இந்த ஊழல் சக்திகளை துடைத்து வெளியேற்ற இதுதான் தருணம் என்று கட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் திலிப் பாண்டே செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் உள்ளாட்சி அமைப்புகளில் பாஜகவும் காங்கிரஸூம் செய்திருக்கும் நிதிமுறைகேட்டை மையப்படுத்தி்யே ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பிரச்சாரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.