டில்லி:

டில்லி மாநில தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்ட சம்பவம் காரணமாக  ஆம்ஆத்மி எம்எல்ஏ பிரகாஷ் ஜார்வால் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு எம்எல்ஏவான  அமனதுல்லா கான் சரணடைந்தார்.

அரசாங்கத்தின் விளம்பர செலவு அதிகரித்து வருவது தொடர்பாக கடந்த 19ந்தேதி நேற்று இரவு டில்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட தலைமை செயலாளருக்கும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்க ளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் பிரகாஷ் ஜர்வால் மற்றும் அமானத்துல்லா கான் ஆகியோர் தலைமை செயலாரை தாக்கியதாக, அவர் கூறிய புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து, பிரகாஷ் ஜார்வாலை கைது செய்த டில்லி போலீசார், அமனதுல்லா கானை தேடி வந்தனர். இந்நிலையில், அமனதுல்லா கான் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், , தலைமை செயலாளர்  தாக்கப்பட்டதாக கூறப்பட்ட சமயத்தில் தான் வீட்டில் இருந்ததாகவும், தன் மீது பொய்யான புகார் பதியப்பட்டுள்ளது என்றும் கூறினார்.