பாஜகவின் நமோ டிவிக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியதா?: ஆம் ஆத்மி கட்சி கேள்வி

புதுடெல்லி:

தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்தபின் பாஜக தொடங்கியுள்ள நமோ டிவிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பி தேர்தல் ஆணையத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடிதம் அனுப்பியுள்ளது.


ஆம் ஆத்மி கட்சி சார்பில் அனுப்பியுள்ள கடிதத்தில், பாஜகவின் நமோ டிவி ஆரம்பிக்க தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா?
தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்தபின் புதிதாக டிவி ஆரம்பிக்க ஒப்புதல் தரமுடியுமா?

ஒப்புதல் தரவில்லை என்றால் தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது?
நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப மீடியா சர்ட்டிபிக்கேஷன் கமிட்டியிடம் பாஜக அனுமதி பெற்றதா?

அவ்வாறு இல்லையென்றால், விளக்கம் கேட்டு ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதேபோன்று, நமோ டிவி மீது நடவடிக்கை எடுக்குமாறு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் மற்றும் டிடிஹெச் சேவை வழங்குவோரை காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published.