அரசுப் பள்ளியில் குழந்தைகளை சேர்த்த ஆம் ஆத்மி எம் எல் ஏ

டில்லி

ம் ஆத்மி கட்சியை சேர்ந்த டில்லி சட்டமன்ற உறுப்பினர் தனது குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்த்துள்ளார்.

நடந்து முடிந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் டில்லி அரசுப்பள்ளி மாணவர்கள் பெருமளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.   டில்லி யூனியன் பிரதேசத்தில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி 90.64% ஆகவும் தனியார் பள்ளியின் தேர்ச்சி 88.35% ஆகவும் இருந்துள்ளது.    மேலும் 638 அரசுப்பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 90% விட அதிகம் ஆக இருந்தது.

டில்லியின் ஒக்ளா தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் அமானத்துல்லா கான்.   இவர் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை மிகவும் பாராட்டி உள்ளார்.    அத்துடன் தனது மகன் அனாஸ் என்பவரை அரசுப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பிலும் தனது மகள் தகோரா என்பவரை ஆறாம் வகுப்பிலும் சேர்த்துள்ளார்.

இது குறித்து அமானத்துல்லா கான், “தற்போதைய அரசின் முயற்சியால் அரசுப் பள்ளிகள் வெகுதூரம் முன்னேறி வந்துள்ளன.    அரசுப் பள்ளிகளின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும்.   அதற்கு நானே ஒரு முன்னுதாரணமாக விரும்பினேன்.  அதனால் எனது குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்த்தேன். மேலும் எனது உறவினர்களின் குழந்தைகளும் விரைவில் அரசுப் பள்ளிக்கு மாற உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.