டில்லி:

ம்ஆத்மி கட்சியில் உள்கட்சி பூசல் காரணமாக, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி எம்.எல்.ஏ.க்களில் காந்திநகர் எம்எல்ஏ அனில் பாஜ்பாய், கட்சியில் இருந்த விலகி  பாரதிய ஜனதா கட்சியில் கடந்த 4ந்தேதி இணைந்தார்.

இந்த நிலையில் மற்றொரு அதிருப்தி எம்எல்ஏவான  தேவிந்தர் குமார் ஷெராவத் இன்று பாஜகவில் இணைந்தார். இது ஆம்ஆத்மி கட்சி தலைவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக, காங்கிரசுக்கு எதிராக டில்லியில் களமிறங்கி ஆட்சியை கைப்பற்றிய ஆம்ஆத்மி கட்சியில், உள்கட்சி பூசல் தலைவிரித்தாடுகிறது. இதன் காரணமாக சில எம்எல்ஏக்கள் கட்சியின் தலைமை மீது அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அதிருப்தி எம்எல்ஏக்களை வளைக்க பாஜக முயற்சிகளை எடுத்து வருகிறது.

டில்லி பாஜக பொறுப்பாளர் விஜய் கோயல் அதிருப்தி எம்எல்ஏக்களை விலைபேசி வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. ஒரு எம்.எல்.ஏ.வுக்கு பத்து கோடி ரூபாய் வரை விலை நிர்ணயிகப்பட்டு உள்ளதாகவும் டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், கடந்த 4ந்தேதி காந்திநகர் எம்எல்ஏ  அனில் பாஜ்பாய் பாஜகவில் இணைந்த நிலையில், தற்போது,  பிஜ்வாசன் தொகுதி எம்.எல்.ஏ. தேவிந்தர் குமார் ஷெராவத் இன்று விஜய் கோயல் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேவிந்தர் குமார் ஷெராவத் சமீபத்தில் கெஜ்ரிவாலுக்கு எதிராக பகிரங்கமாக கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அதையடுத்து அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்ட நிலையில், தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

இருந்தார். இதற்காக இவர் கட்சியில் இருந்து இடைக்கால நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

டெல்லி சட்டசபைக்கு உட்பட்ட காந்திநகர் தொகுதி எம்.எல்.ஏ. அனில் பாஜ்பாய் கடந்த 3-ம் தேதி பாஜகவில் இணைந்தது நினைவிருக்கலாம்.