ஆம் ஆத்மி ஆட்சியில் இதுவரை யாரும்செய்யாத ஊழல் நடந்துள்ளது – அமித்ஷா சாடல்

 

டில்லி,

ஆம் ஆத்மியைப்போல் வேறு எந்தக் கட்சியும் ஊழல் செய்யவில்லை என்று பாஜக தலைவர் அமித்ஷா கடுமையாக சாடியுள்ளார்.

டெல்லி முனிசிபல் கார்பரேசன் தேர்தலை முன்னிட்டு அங்குள்ள ராம்லீலா மைதானத்தில் இன்று  பாஜகவின் பேரணி நடைபெற்றது.

அதில் பேசிய அமித் ஷா, ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை நினைவுகூர்ந்தார். அம்மாநில மக்களைப்போல் டெல்லி மக்களும் பாஜகவுக்கு வாக்களிக்கவேண்டும் என்றார்.

தமிழ்நாடு, பஞ்சாப் போன்று டெல்லி அரசும் விளம்பரத்துக்காக அதிக செலவுசெய்வதாக குறைகூறினார்.

டெல்லி சட்டமன்ற தேர்தலைப்போல் இப்போதும் தவறுசெய்து விடவேண்டாம் என்று மக்களை வலியுறுத்திய அமித் ஷா, டெல்லியில் இதுவரை எந்த ஆட்சியும் செய்யாத அளவுக்கு ஆம் ஆத்மி ஊழல் செய்திருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

 

English Summary
AAP more corrupt than any previous government in Delhi: Amit Shah at Ramlila Maidan rally