உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் புதிய படத்தின் வில்லனாக ஆரவ்….!

‘சைக்கோ’ படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் உதயநிதி.

உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.

உதயநிதி ஸ்டாலினுக்கு நாயகியாக நிதி அகர்வால் நடித்து வருகிறார். மேலும் ஆரவ், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது உறுதியாகியுள்ளது.

இதில் உதயநிதிக்கு வில்லனாக ஆரவ் நடித்து வருகிறார்.