தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் வெற்றி பெற்று பிரபலமானவர் ஆரவ்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ், ராஜபீமா உள்ளிட்ட படங்களில் நடித்தார் ஆரவ்.

இந்நிலையில் நடிகர் ஆரவ்வுக்கும் கௌதம் மேனனின் ‘ஜோஷ்வா: இமைபோல் காக்க’ படத்தின் ஹீரோயின் ராஹேவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் வாய் திறக்கவில்லை.

இருவரும் வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறப்படுகிறது.