76பந்தில் 172 ரன்கள்: ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் உலக சாதனை!

டி20 விளையாட்டில் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் உலக சாதனை படைத்துள்ளார். 76 பந்துகளில் 172 ரன்களை எடுத்த சாதனை படைத்துள்ளார்.

ஏற்கனவே டி 20 விளையாட்டில் உலக சாதனை படைத்துள்ள பிஞ்ச், தற்போது தனது முந்தைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

ஆரோன் பிஞ்சின் இந்த ஸ்கோரே டி 20 விளையாட்டில் அதிக பட்சமான ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவுக்கும், ஜிம்பாப்வேக்கும் இடையே இரண்டாவது டி20 விளையாட்டு ஹராரேவில நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, தொடக்க ஆட்டக்காரர்களாக பிஞ்ச் மற்றும் டி ஆர்சியை களமிறக்கியது.

தொடக்கம் முதலே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஞ்ச், 22 பந்தில் 50 ரன்களை எடுத்து சாதனை படைத்தார்.தொடர்ந்து ஆடிய இந்த ஜோடி அதிடியாக ஆடியது.

ஆரோன் பிஞ்ச்  76 பந்துகளில் 172 ரன்களை எடுத்து உலக சாதனை புரிந்தார். இந்த ஆட்டத்தில் பிஞ்ச்  16 போர்களும், 9 சிக்ஸ்களும் அடித்து சாதனை புரிந்துள்ளார்.  அவருடன் இணைந்து ஆடிய டிஆர்சி 42 பந்துகளில் 46 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.

ஆரோன் பிஞ்சின் இந்த உலக சாதனை ஏற்கனவே அவர் ஏற்படுத்திய உலக சாதனையை முந்தியுள்ளது. டி20 வரலாற்றில் இதுவே அதிக அளவிலான ஸ்கோர் என்று கூறப்படுகிறது