அமீர் இயக்கத்தில் ஆர்யாவின் சந்தனதேவன்

இயக்குனர் அமீர் ஆதி பாகவான் படத்தைத் தொடர்ந்து ஆர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படத்திற்கு ‘சந்தனதேவன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில், தற்போது பட்டதாரி படத்தின் கதாநாயகி அதிதி ஒப்பந்தமாகி இருக்கிறார் என கூறப்படுகிறது.

இப்படம் 1980களில் நடக்கும் கதையில் உருவாகவுள்ளது எனவும், இப்படத்திற்காக மதுரை காரராக மாறும் ஆர்யாவிற்கு அந்த காலகட்டத்து வீர விளையாட்டுகளும் பயிற்சி கொடுக்கப்படுகிறதாகவும் கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி