குவஹாத்தி: என்ஆர்சி பட்டியலிலிருந்து வெளியேற்றப்பட்ட 19 லட்சம் பேர் என்ற எண்ணிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள அனைத்து அஸ்ஸாம் மாணவர்கள் யூனியன் என்ற அமைப்பு, என்ஆர்சி -யின் செயல்பாட்டை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல முடிவெடுத்துள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னதாக, அஸ்ஸாமில் ஊடுருவிய வெளிநாட்டவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்கான போராட்டத்தை துவங்கியது அனைத்து அஸ்ஸாம் மாணவர்கள் யூனியன். கடந்த யூனியன் கடந்த 1980ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட என்ஆர்சி வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தது.

கடந்த 1985ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் போடப்பட்ட அஸ்ஸாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் உரிமையைப் பெற்ற அமைப்பாகும் இது. இந்த ஒப்பந்தப்படி, வாக்காளர் பட்டியலிலிருந்து வெளிநாட்டவர்களைக் கண்டறிந்து, அப்பெயர்களை நீக்குவதுடன், அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வகை செய்வதாகும் இந்த ஒப்பந்தம்.

“தற்போது என்ஆர்சி வெளியிட்டிருக்கும் 19 லட்சம் கணக்கு என்பது ஏற்க முடியாதது. அஸ்ஸாமில் ஊடுருவியோர் எண்ணிக்கை கடந்த காலங்களில் மிக அதிகம். எனவே, இந்த என்ஆர்சி -யில் நிறைய தவறுகளும் குறைபாடுகளும் உள்ளன. எனவே, உச்சநீதிமன்றம் சென்று இந்த தவறுகள் மற்றும் முரண்பாடுகளை களைய வகை செய்வோம்” என்று அந்த யூனியன் பொதுச்செயலாளர் தெரிவித்தார்.