திருமலை,

திருப்பதி ஏழுமலை வெங்கடேஷ்வரரை சந்திக்கவும் இனிமேல் ஆதார் எண் கட்டாயம் தேவை என்று திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

நாட்டில் தற்போது அனைத்து விதமான பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் ஆதார் எண்ணை கட்டாயமாக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிச்சிக்க இணையதளம் மூலம் முன்பதிவு செய்பவர்கள், தேவஸ்தான  இணையதளத்தில் ஆர்ஜித சேவா டிக்கெட், வாடகை அறை முன்பதிவு, 300 விரைவு தரிசன டிக்கெட், ஸ்ரீவாரி சேவை விண்ணப்பம், உண்டியல் காணிக்கை கணக்கிடும் பிரிவு விண்ணப்பம் உள்பட தேவஸ்தானம் வழங்கி வரும் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் எண்ணை கட்டாயம் அளிக்கவேண்டும் என தேவஸ்தானம் கூறியுள்ளது.

வெளிநாட்டு பக்தர்கள் ஆதார் எண்ணுக்கு பதிலாக பாஸ்போர்ட் எண்ணை பதிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.