திமுக கூட்டணியில் ஆதித் தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு..!

சென்னை: திமுக கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் சார்பில் முக்கியக் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

இந் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள ஆதித் தமிழர் பேரவையுடன் பேச்சுவார்த்தை இன்று முடிவு செய்யப்பட்டு, உதயசூரியன் சின்னத்தில் ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் அதியமான் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இதே போன்று திமுக கூட்டணியில் உள்ள மக்கள் விடுதலை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை கட்சியும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது.