டில்லி

மோடியை விமர்சித்த பத்திரிகையாளர் ஆதிஷ் தசீருக்கு வழங்கப்பட்டிருந்து வெளிநாட்டு  இந்தியர் குடியுரிமை அந்தஸ்து நீக்கியது குறித்து அவர் தாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

பிரபல பத்திரிகையாளரான ஆதிஷ் தசீர் அமெரிக்காவின் டைம் பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரையில் பிரதமர் மோடியைப் பிரிவினையின் தலைவர் எனக் குறிப்பிட்டிருந்தார்.   அவருக்கு வழங்கப்பட்டிருந்த வெளிநாட்டு இந்தியர் குடியுரிமை சிறப்பு அந்தஸ்தை மத்திய உள்துறை அமைச்சகம் சென்ற வியாழன் அன்று நீக்கியது.   அவர் தந்தை ஒரு பாகிஸ்தானியர் என அவர் தெரிவிக்காததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து இந்தியன் எக்ஸ்பிர்ஸ் செய்தி ஊடகத்தில் ஆதிஷ் தசீரின் தாய் தவ்லீன் சிங் வெளியிட்டுள்ள கட்டுரையில், “நான் கடந்த 5 ஆண்டுகளாக வெளிப்படையாக ஆதரவு அளித்து வந்த ஒஉரட்கனருப் அரசில் எனது மகன் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.    அவர் தந்தை ஒரு பாகிஸ்தானியர் என்பதை மறைத்ததாக அவர் மீது உள்துறை அமைச்சகம் மூன்று மாதம் முன்பு விளக்கம் கேட்டிருந்தது.

நான் எனது மகனை 1982 ஆம் வருடம் இந்தியாவுக்கு அழைத்து வந்து வளர்த்து வருகிறேன்.   அவருக்கு நான் மட்டும் ஒரே உள்ளூர் காப்பாளராக அவருடைய 18 ஆம் வயது வரை இருந்தேன்.   அதற்கான பிரமாண பத்திரத்தில் அவர் தந்தை பெயரைக் குறிப்பிட்டுள்ளேன்.   என் மகனுக்கு 18வயது ஆன பிறகு நான் அதிகாரிகள் அறிவுரைப்படி  காலவரையற்ற விசாவுக்கு விண்ணப்பித்தேன்.

அப்போது யாரும் அவருடைய தந்தை ஒரு பாகிஸ்தானியர் என்பது குறித்து எதுவும் கேட்கவில்லை.   இந்த தகவல்களைத் தெரிவிக்க நான் உள்துறை அமைச்சரை தொடர்பு கொண்டேன்.   ஆனால் எனதுஅழைபுக்கள் ஏற்கப்படவில்லை.   எனவே பிரதமரின் ஊடக தொடர்பாளர் ஹிரன் ஜோஷியை அழைக்க முயன்றேன்.

ஆனால் அவரும் எனது தொலைப் பேசி அழைப்பை ஏற்காததால் பல இ மெயில்கள் அனுப்பி உள்ளேன்.  அவற்றுக்கும் பதில் இல்லாததால் பெரிய பதவியில் உள்ள ஒருவர் அதிஷை பழி வாங்க விரும்புவதைத் தெரிந்துக் கொண்டேன்.   அதன்பிறகு எனக்குப் பிரதமர் மோடியைப் பிரிவினையின் தலைவர் என விமர்சித்தது நினைவுக்கு வந்தது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கேள்விகளுக்கு நானோ அல்லது எனது மகனோ அளித்த  பதில்களை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.   மாறாக எனது மகனைத் தனது தந்தையைக் குறித்து தகவல் அளிக்காமல் மறைத்துள்ளதாகக் குற்றம் சாட்டி உள்ளனர்.  இவ்வாறு குற்றம் சாட்டி அவருடைய குடியுரிமையை பறித்து வெளியேற்ற நினைப்பது தவறானது மட்டுமின்றி மிகவும் தீங்கானது. ” என தெரிவித்துள்ளார்.