ரஜினி நடித்த ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத் தலைப்பில் ஜி.வி.பிரகாஷ்…!

எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் ஹாரர் ஃபேன்டஸி படத்திற்கு தலைப்பு அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், ‘ஆயிரம் ஜென்மங்கள்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சண்டைப் பயிற்சி இயக்குநர் கனல் கண்ணன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதில், ஹீரோயினாக ஈஷா ரெப்பா நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் சதீஷ் நடிக்கிறார்.

‘ஆயிரம் ஜென்மங்கள்’, ரஜினி நடிப்பில் 1978-ம் ஆண்டு ரிலீஸான படம். துரை இயக்கிய இந்தப் படத்தில், லதா, விஜயகுமார், பத்மபிரியா உள்ளிட்ட பலர் நடித்தனர். ரஜினி நடிப்பில் வெளியான முதல் த்ரில்லர் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி