ஆர்யாவின் பெயரை தன் பெயருடன் இணைத்த நடிகை அபர்ணதி….!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 16 பெண்களில் ஒருவரை தான் மணக்க இருப்பதாக ஆர்யா தெரிவித்தார்.

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்ணதி, ஆர்யாவை அதிகம் விரும்பியவர்களில் ஒருவராகவே இருந்தார்.

அந்நிகழ்ச்சிக்குப் பின்னர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக ‘ஜெயில்’ படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை அபர்ணதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயருக்கு பின்னால் ஆர்யா பெயரை ‘6 ya’ என்று இணைத்திருக்கிறார். இதைப்பார்த்த பலரும் ஆர்யாவை இன்னும் அபர்ணதி காதலித்து வருகிறாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.