காஷ்மீரில் கடத்தப்பட்ட போலீஸ்காரர் சுட்டுக் கொலை….உடல் மீட்பு

ஸ்ரீநகர்:

தெற்கு காஷ்மீர் குல்காம் மாவட்டம் முடல்ஹமா பகுதியில் போலீஸ்காரர் சலீம் ஷா என்பவர் விடுமுறையில் வீட்டில் இருந்தார். அவரை நேற்றிரவு தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். போலீசார் தீவிர தேடுதல் வேட்டையும் நடத்தியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் சலீமின் உடல் வயல்வெளியில் இருந்து மீட்கப்பட்டது. அவரது உடல் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டிருந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த போலீஸ்காரரை கொலை செய்த தீவிரவாதிகளை தேடி வருகின்றனர்.

இந்த செயலுக்கு எந்தவொரு தீவிரவாத அமைப்பும் இது வரை பொறுப்பேற்கவில்லை. கடந்த மாதம் அவுரங்கசீப் என்ற போலீஸ்காரர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.