கலாம் மணி மண்டபம் திறப்பு: மோடி நாளை தமிழகம் வருகை!

ராமேஸ்வரம்,

லாம் நினைவுநாளா நாளை, அவருக்கு கட்டப்பட்டு வரும் மணி மண்டபம் திறக்கப்பட இருக்கிறது. இதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

இதையொட்டி ராமேஸ்வரம் பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் மணி மண்டபம் நாளை ( 27ந்தேதி) திறக்கப்பட உள்ளது. இதையடுத்து டில்லியில் இருந்த வந்த பாதுகாப்பு படை அதிகாரிகள் ராமேஸ்வரத்தில் முகாமிட்டு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

பிரதமர் வருகையையொட்டி ராமேஸ்வரம் தீவு முழுவதும் மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் இறங்கும் மண்டபம் ஹெலிபேடு தளம், கூட்டத்தில் பேசும் இடம், கலாம் நினைவிடப்பகுதியில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை, ஆய்வு செய்ய டில்லியில் இருந்து நேற்று பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை டிஐஜி சர்மா, அதிகாரிகளுடன் வந்தார்.

இவர் மணிமண்டப தெபாடக்க  விழா நிகழ்ச்சிகள் குறித்து, மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் மண்டபம் ஹெலிபேடு தளம், மேடை அமையும் இடத்தை பார்வையிட்டு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.

இதன் தொடர்ச்சியாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.