“குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் இஸ்லாமியரே அல்ல” என்று த.த.ஜ. தலைவர் பி.ஜெய்னுலாபுதீ்ன் தெரிவித்திருந்தார். அதற்கு இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர்  தடா ஜெ அப்துல் ரஹிம்  பதில் அளித்துள்ளார்.

இது குறித்து தடா ரஹீம் விடுத்திருக்கும் அறிக்கை:

“முன்னாள் குடியரசுத்தலைவர்  ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் முஸ்லிம் இல்லை என ததஜ தலைவர் பி.ஜெய்னூலாபுதீன் கூறியுள்ளார்…

இவர் முஸ்லிம் , அவர் இல்லை என அங்கீகாரம் கொடுக்க பி.ஜெய்னூலாபுதீனுக்கு எந்தவித அங்கீகாரமும் சமுதாயமோ மார்க்க அறிஞர்களோ இவருக்கு (பிஜே) வழங்கவில்லை …

ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் முஸ்லிம் இல்லை என சொல்லும் பிஜே என்கிற பி.ஜெய்னூலாபுதீன் முஸ்லிமா என்கிற கேள்வி நமக்கு எழுகிறது…

ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் மணிமண்டபத்தில் வீணை வாசிப்பது போன்ற சிலையும் பக்கத்தில் பகவத் கீதை நூலும் வைத்து அப்துல் கலாமை இந்துத்துவ ஆர் எஸ் எஸ் சித்தாந்த வாதியாக சித்தரித்துள்ள மத்திய அரசின் செயலை கண்டித்து உடனே இஸ்லாமிய மரபுகளை குழிதோண்டி புதைக்கும் வகையில் உள்ள அப்துல் கலாம் சிலையும் பக்கத்தில் உள்ள பகவத் கீதையையும் அகற்ற வேண்டும் இல்லை என்றால் நாங்கள் (ததஜ) உடைத்து எறிவோம் என கோரி இருந்தால் பிஜே என்கிற பி.ஜெய்னூலாபுதீன் முஸ்லீம் என ஏற்றுக் கொள்ளலாம்…

ஆனால் ஆர் எஸ் எஸ் சித்தாந்த கோரிக்கையான அப்துல் கலாம் முஸ்லிம் இல்லை என்கிற கோரிக்கையை முழுவதும் ஏற்றுக் கொண்டு, முஹம்மதுர் ரசூலில்லாஹ் மாநாட்டில் அப்துல் கலாம் முஸ்லிம் இல்லை என ததஜ தலைவர் பிஜே கூறியிருப்பதை பார்த்தால் பிஜே முஸ்லிமா என்ற கேள்வி எழுகிறது…

இந்திய சுதந்திர போராட்டத்தின் போது பல லட்சம் முஸ்லிம்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய போது பல ஆயிரம் முஸ்லிம்கள் உயிரை இழந்துள்ளனர் பல ஆயிரம் முஸ்லிம்கள் உடமைகளை இழந்து கொடூஞ் சிறையில் இருந்து வந்துள்ளனர்.

முஸ்லிம்களின் தியாகத்தை தொடர்ந்து மறுத்துவரும் ஆர் எஸ் எஸ் பிஜேபி பாசிச சித்தாந்த வாதிகளின் கருத்துக்கு துணை போவது போல…

அல்லாஹ்விற்காக தான் உயிரை கொடுக்க வேண்டும் அல்லாஹ்விற்காக தான் உடமைகளை இழக்க வேண்டும் அல்லாஹ்விற்காக கொடூஞ்சிறைக்கு ஆளாக வேண்டும் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி பல ஆயிரம் முஸ்லிம்கள் உயிரை கொடுத்ததும் பல ஆயிரம் முஸ்லிம்கள் உடமைகளை இழந்ததும் இஸ்லாத்திற்க்கு எதிரானது என சுதந்திர போராட்ட முஸ்லிம் தியாகிகள் முஸ்லிம் இல்லை என இந்த நவீன தவ்ஹீத் வாதி பிஜே சொல்லுவார் போல …

இவர் இஸ்லாமியர் இல்லை அவர் இஸ்லாமியர் இல்லை என பத்வா கொடுக்கும் பிஜே முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி போராட்டம் செய்தது இஸ்லாமிய மரபா ?

தனி இட ஒதுக்கீடு மூலம் ராணுவத்தில் முஸ்லிம்கள் இணைந்து போரிடும் போது உயிர் இழந்தால் அவர் முஸ்லீமா ? முஸ்லிம் இல்லையா ?

பதில் சொல்ல முடியுமா ?

யார் முஸ்லிம் யார் முஸ்லிம் இல்லை என்பதை தீர்மானிக்க கூடியவன் இறைவன் (அல்லாஹ்) மட்டுமே பிஜே போன்ற சுயநலவாதிகள் இல்லை…

ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் மரணத்தில் மறைந்து உள்ள மர்மங்களை வெளிப்படுத்த ததஜ (பிஜே) முயன்று இருந்தால் வீரம் எனலாம் ..”

இவ்வாறு தடா ரஹீம் தெரிவித்துள்ளார்.