ஸ்ரீநகர்: ஜம்முகாஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் பலகோடி மதிப்பிலான  சொகுசு பங்களா, ரூ.25 கோடி மதிப்பிலான அரசு நிலத்தைஆக்கிரமிதது கட்டப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இதற்காகவே அவரது ஆட்சி காலத்தில் ரோஷ்னி சட்டம் கொண்டு வரப்பட்டு அந்த சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக்கப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுஉள்ளது.

ஜம்மு காஷ்தீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லாவின் வீடு ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி நிர்வாகம் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2001ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர்  மாநில முதல்வராக பரூக் அப்துல்லா இருந்த போது ரோஷ்னி சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, அரசுக்கு நிதி திரட்ட ஆக்கிரமிப்பு நிலத்தில் வசிப்பவர்களுக்கே, அப்போதைய சந்தை விலையில் நிலங்கள் விற்பனை செய்யப்பட்டன. இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு ஆளுநர் சத்யபால் மாலிக்  ரோஷினி சட்டத்தை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.  மேலும், குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமே பலன்கள் கிடைக்கும் வகையில் இச்சட்டம் அமல்படுத்தப்பட்டு, முறைகேடு நடந்திருக்கிறது எனக் கூறி, ஜம்மு – காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போதைய தலைமை நீதிபதி கீதா மிட்டல், ராஜேஷ் பின்டல் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கினை விசாரணை, நடத்தி, ரோஷ்னி சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது எனத் தெரிவித்ததோடு, முறைகேடு குறித்த விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தனர். மேலும், இந்தச் சட்டத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்கள் அனைத்தையும் திருப்பி தர உத்தரவும் பிறப்பித்தனர். அன்று முதல் இந்த வழக்கினை சிபிஐ விசாரணை செய்து வருகிறது.

இதந்நிலையில் தற்போது அந்த ரோஷினி சட்டத்தின்கீழ் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பலம் அடைந்தவர்கள் குறித்தபட்டியல் வெளியிடப்பட்டு உளளது.

ஜம்மு காஷ்மீர்  முன்னாள் முதல்வர்களான பரூக், உமர் அப்துல்லாவின் ஜம்மு வீடு சுமார் ரூ.25 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பரூக் அப்துல்லாவின் குடியிருப்பு வீடு, சுன்ஜ்வானில் கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது, அதே போல, அவர்களின் தேசிய மாநாட்டு கட்சியின் ஜம்மு மற்றும் காஷ்மீர் தலைமை அலுவலகங்களும் ஆக்கிரமிப்பு நிலத்திலேயே கட்டப்பட்டு, அதை  ரோஷ்னி சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், காஷ்மீரின் முன்னாள் நிதியமைச்சர் ஹசீப் டிராபு, முன்னாள் உள்துறை அமைச்சர் சஜ்ஜாத் கிச்லு, முன்னாள் அமைச்சர்கள் அப்துல் மஜீத் வாணி மற்றும் அஸ்லம் கோனி, தேசிய காங்கிரஸ் தலைவர் சயீத் அகூன் மற்றும் முன்னாள் வங்கித் தலைவர் எம்.ஒய் கான் ஆகியோரும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து உள்ளனர்.

அதைததொடர்ந்து, முப்தி முகமது சையத் தலைமையிலான பிடிபி அரசும் இந்த ஊழலில் தொடர்பு வைத்துள்ளது என்று குற்றம்சாட்டப்பட்டது.  காஷ்மீரின் புகழ்பெற்ற ஹோட்டல் வணிகர் முஷ்டாக் அகமது சாயா தனது பெயரில் இந்தச் சட்டத்தால் நிலம் வாங்கியுள்ளார். இதேபோல், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி முகமது ஷாஃபி பண்டிட் தனது மனைவியின் பெயரில் நிலத்தை எடுத்துள்ளார். தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் சயீத் அகுன், முன்னாள் வங்கித் தலைவர் எம்.ஒய் கான், முன்னாள் உள்துறை அமைச்சர் சஜ்ஜாத் கிச்லூ, முன்னாள் அமைச்சர்கள் அப்துல் மஜீத் வாணி, அஸ்லம் கோனி ஆகியோரும் பல ஏக்கர் நிலங்களை முறைகேடாக வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

அதுபோல, கடந்த  2007 ஆம் ஆண்டில், அப்போதைய  முதல்வராக இருந்து குலாம் நபி ஆசாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு, ரோஷினி சட்டத்தின் கீழ் விதிகள் வகுக்கப்பட்டு,  விவசாய நிலங்கள் கிட்டத்தட்ட இலவசமாக வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  நகர்ப்புற நிலங்கள் வெகுமதி, தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் என்ற பெயரில் தள்ளுபடி விலையில் வழங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

ரோஷினி சட்டம் என்றால் என்ன?

ரோஷினி சட்டம், ஜம்மு – காஷ்மீர் மாநிலங்களுக்கு தேவையான நீர் மின் திட்டத்தை கொண்டுவர நிதி திரட்டும் வகையில் அரசு மு கொண்டு வந்தது.  அதோவது, மாநில மின்தேவையை கருத்தில்கொண்டு,  ரூ.25,000 கோடி வரை இந்த நீர் மின் திட்டங்களுக்கு நிதி தேவைப்பட்டதால் அதனை திரட்ட, அரசுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்துள்ள மக்களுக்கு அரசு நிலங்களின் உரிமையை அப்போதைய சந்தை விலையில் வழங்கும்  வகையில் இந்த ரோஷினி சட்டம் அமல்படுத்தப்பட்டது.  இந்தத் திட்டத்தின் மூலம் வனப்பகுதி, சமநிலை பகுதி என அரசின் நிலங்கள் சுமார் 2,49,999 ஏக்கர் அதை ஆக்கிரமித்தவர்களுக்கே மாற்றப்பட்டது.

இந்தசட்டத்தின்மூலம் பயன் அடைந்தது பெரும்பாலும் அரசியல் கட்சியினர் என்பது குறிப்பிடத்தக்கது.