மும்பை: ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப்கோஸ்வாமி மீது மும்பை நீதிமன்றத்தில் போலீசார்  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

பிரபல இன்டீரியர் டிசைனர் அன்வி நாயக் பணிகளுக்குப் பணம் தராமல் ரிபப்ளிக் சேனல் இழுத்தடித்த காரணத்தால்,  அவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம், தற்போது சர்ச்சையாகி   கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக, உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக செயல்பட்டு வந்த  அர்னாப் கோஸ்வாமி மீது விசாரணை நடத்தப்படும் என மகாராஷ்டிர உள்துறை அமைச்சர்  அறிவித்தார். அதைத் தொடர்ந்து,  தற்போது பப்ளிக் சேனல் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸாமி உள்பட 3 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நடவடிக்கை எடுத்தது. இந்த வழக்கில், அர்னாப் கோஸ்வாமியை ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் போலீஸார் கடந்த மாதம் 4-ம் தேதி கைது செய்தனர். பின்னர் அவர் கடந்த மாதம் (அக்டோபர்) 11-ம் தேதி ஜாமீன் பெற்று  வெளியில் உள்ளார்.

இந்த நிலையில்,  இன்டீரியர் டிசைனர், தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் அர்னாப் கோஸ்வாமி , ஃபெரோஷ் ஷேக், நிதிஷ் ஷரதா ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை போலீஸார் ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் 65 பேர் சாட்சியங்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர் என அரசு தரப்பு வழக்கறிஞர் பிரதீப் காரத் தெரிவித்தார்.

இந்த வழக்கில் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தடை விதிக்க வேண்டும் எனக் கோரி அர்னாப் கோஸாமி தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனு இதுவரை விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.