ஆகஸ்ட் 14-ஆம் தேதி ஜீ 5 தளத்தில் கென் கோஷ் இயக்கத்தில் குணால் கெம்மு நடித்திருக்கும் வெப் சீரிஸ் ‘அபய் 2’ வெளியானது .

இதில் காவல் நிலையத்தில் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அதில் குற்றவாளிகள் பலகையில் குதிராம் போஸ் என்கிற சுதந்திரப் போராட்ட வீரரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

இதை கவனித்த சில பார்வையாளர்கள், அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர ஆரம்பித்தனர். இந்தத் தொடரின் தயாரிப்பாளர்களை கடுமையாக விமர்சித்து #BoycottZee5 என்கிற ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்தது.

இதற்கு ஜீ 5 தரப்பில் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கேட்டுக் கொண்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆனால் இதையும் மீறி நெட்டிசன்கள் பலரும் ஜீ 5 தளத்தை விமர்சித்துப் பதிவிட்டு வருகின்றனர்.