அபிநந்தன் வாகா எல்லையை வந்தடைந்தார்

வாகா

பாகிஸ்தான் சிறை பிடித்த விங் கமாண்டர் அபிநந்தன் வாகா எல்லையை வந்தடைந்தார்.

அபிநந்தன்

1பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானியான விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் அரசு உலக நாடுகளின் அழுத்தத்தினால் விடுதலை செய்ய ஒப்புக் கொண்டது.   அவரை நேரடியாக விமானம் மூலம் அழைத்துச் செல்ல இந்தியா முயற்சி செய்தது.

பாகிஸ்தான் அதற்கு மறுப்பு தெரிவித்து அபிநந்தனை லாகூரில் இந்திய தூதரிடம் ஒப்படைத்து சாலை வழியாக இந்திய பாகிஸ்தான் எல்லையான வாகாவுக்கு அழைத்து வந்தது.   அவர் தற்போது  வாகாவுக்கு வந்துள்ளார்.  அவருக்கு மக்கள் ஆரவார வரவேற்பு அளித்துள்ளனர்.

போர் கைதிகளாக பிடிபட்டோர் விடுதலை செய்து நாட்டுக்கு அழைத்து வரும்போது அவரை யாரும் சந்தித்துப் பேச அனுமதிப்பது வழக்கமில்லை.   அவரை மருத்துவ மற்றும் மனநிலை சோதனைக்கு உட்படுத்திய பிறகே யாரையும் சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள்.

அபிநந்தனை டில்லி க்கு அழைத்து சென்று மருத்துவ சோதனைகள் செய்ய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.    அதை ஒட்டி அவரை வரவேற்க சென்ற பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்பட யாரையும் அவரை சந்திக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என கூறப்படுகிறது

கார்ட்டூன் கேலரி