தாயகம் திரும்பினார் அபிநந்தன்: அடுத்தடுத்து நடைபெற உள்ள நிகழ்வுகள் என்னென்ன? விவரம்…..

டில்லி:

பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய வீரர் அபிநந்தன், இந்தியா உள்பட உலக நாடுகளின் வற்புறுத்தல் காரணமாக இன்று விடுவிக்கப்பட்டார். அவரை இந்திய பாகிஸ்தான் எல்லையான வாகா பகுதிக்கு மாலை சுமார் 4.30 மணி அளவில் வந்தடைந்தார். அவருக்கு மருத்துவ சோதனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

வாகா எல்லை வந்தடைந்த அபிநந்தனக்கு மேளதாளங்கள் முழக்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

பொதுவாக போர்க்கைதிகளை பிடிபடுவம் வீரர்கள், மீண்டும் தாய்நாட்டுக்கு அனுப்பப்படும் போது பல்வேறு நடைமுறைகள், சோதனைகள் கடைபிடிக்கப்படுவது வழக்கம். அவைகள் அனைத்தும் முடிவடைந்த பிறகே அவர்களை யாரும் சந்திக்க முடியும்.

இந்த நிலையில் வாகா வந்தடைந்துள்ள அபிநந்தனுக்கும் வழக்கப்படி மருத்துவ சோதனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதுபோன்று விடுவிக்கப்படும் வீரர்களிம் நடைபெறும் வழக்கமான நடைமுறைகள் என்னென்ன என்பத குறித்து ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது,

முதலில், அபிநந்தனை அழைத்து செல்லும் விமானப்படை அதிகாரிகள், தங்கள் அலுவலகத்தில் வைத்து, விசாரணை மேற்கொள்வார்கள். அவர் பிடிபட்டது எப்படி, அவர் தாக்கப்பட்டாரா, அவருக்கு என்ன வகையான உணவுகள் கொடுக்கப்பட்டன… அவரிடம் என்ன கேட்கப்பட்டது போன்ற கேள்விகளை எழுப்பி பதில் பெறுவார்கள்.

மிகவும் ரகசியமாக நடத்தப்படும் இந்த கேள்விகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. அது தொடர்பாக அறிக்கை தயாரிக்கப்படும்.

அதைத்தொடர்ந்து, மேலதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்து, அவரது உடல் ரீதியாவோ மற்றும் மன ரீதியாக ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்பது குறித்தும் ஆராய்ந்து, அதற்கு தகுந்த சிகிச்சை மேற்கொள்வார்கள்.

முதற்கட்டமாக, உளவியல் ரீதியாக அவரது மன நிலை, அழுத்தத்தை சரி செய்ய வாய்ப்பு தருவார்கள். அதன்படி, அவர் விமானப்படை அலுவலகத்திலேயே  சுதந்திரமாக இருக்கலாம்… அல்லது அவரது குடும்பத்தினரை வரவழைத்து, அவர்களுடன்  சில நாட்கள் நேரத்தை செலவிடும் வகையில், அவரது மனஅழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.,

இதுபோன்ற உளவியல் ரீதியிலான நடவடிக்கை மூலம், அவர் தனது இயல்பு நிலைக்கு திரும்பு வார். அதன்பிறகே அவரை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்வார்கள்.

ஆனால், இதுபோன்று விடுவிக்கப்படும் வீரர்களை ஒரு வாரம் தனிமையில் வைத்து விசாரணை நடத்துவார்கள் என்பது போன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ராணுவ அதிகாரி, அபிநந்தன் போன்ற விவாரங்களில் அந்த நடைமுறை செயல்படுத்தப்பபடாது என்று கூறினார்.

ஏனெனில், அபிநந்தனை  கைது செய்தது, அதுதொடர்பான வீடியோ, படங்கள் வெளியாகி, வைரலானது. அதை உலகமே கவனித்தது.  உலகின் பார்வை  அனைத்தும் அபிநந்தன் மீது இருந்தது.

இந்த நிலையில், அபிநந்தனை துன்புறுத்தவோ, மனரீதியாக மாற்றவோ வாய்ப்பே இல்லை.

ஆனால், சமூக வலைதளங்களில் பரவி வரும் நடவடிக்கைகள்,  பல மாதங்கள் யுத்த கைதியாக அடைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்படும் வீரர்களிடம்தான் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

காரணமாக, பல மாதங்களாக மற்றொரு நாட்டு ராணுவத்திடம் சிக்கிய அந்த வீரருக்கு, அந்நாட்டு ராணுவத்தினர் மூளைச்சலவை செய்திருக்க வாய்ப்புண்டு. நமது நாட்டை சிறுமைப் படுத்தி, அவர்களுடைய நாட்டை உயர்வாக கூறியும்,  அவர்களுடைய கொள்கையைத் சிறைபிடிக்கப்பட்ட வீரர்களிடம்  திணிக்க முயல்வார்கள்.

அப்படிப்பட்ட நிலையில் விடுவிக்கப்படும் ஒரு வீரர் மனநிலையில் மாற்றம் குழப்பம் இருக்கும். அதுகுறித்து ஆய்வு செய்யவே, வே ஒரு வாரம் தனிமை அறை  (imprison)  கொடுத்துஉளவியல் ரீதியாக  கண்காணிக்கப்படுவார்கள்  என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால், அபிநந்தன் விவகாரத்தில் அதுபோன்று எந்த நிகழ்வும் இல்லை. எனவே, வழக்கமான நடைமுறைகள் முடிந்து ஓரிரு நாளில் அவர் வெளி உலகத்துக்கு வருவார் என்றும் தெளிவாக கூறினார். அதிகபட்சம் 2 அல்லது மூன்று நாட்கள் விசாரணை நடத்திவிட்டு குடும்பத்தாருடன், நண்பர்களுடன் செல்ல அனுமதிக்கப்படுவார். பின்னர் அவர் இயல்பான அவரது முந்தைய பணியில் இணைந்து பணியாற்றுவார்.

ஆனால், அவர் மீண்டும் ஏற்கனவே பணி செய்த இடத்தில் பணி செய்ய விரும்பவில்லை என்று கோரிக்கை வைத்தால், அவரை மாற்று இடத்திற்கு பணி செய்ய அனுப்பி வைக்கப்படுவார்.

அதுபோல, அபிநந்தன் ஓட்டிச்சென்ற விமானம் பாகிஸ்தான் படையினரால் தாக்கப்பட்டு விழுந்து நொறுங்கியது. அது தொடர்பாக அவர்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது இயற்கையானதே.

சிறிய அளவிலான சேதமுற்றிருந்தால், அது சரி செய்யப்படும். ஆனால், முற்றிலும் சேதமடைந் திருந்தால், அதை ராணுவ பதிவில் இருந்து நீக்கிவிடுவார்கள்.  அதற்கு ரைட் ஆஃப் என கூறுவதுழ வழக்கம். அதற்கு பதிலாக புதிய போர் விமானங்கள் வாங்க முயற்சி செய்யப்படும்.

அதுபோலவே அபிநந்தன் செய்தியாளர்களை சந்திக்கலாமா? எப்போது சந்திக்கலாம்  என்பது குறித்தும் கேள்வி எழுந்துள்ளது. ஆனால், பொதுவாக இதுபோன்று விடுவிக்கப்படும் வீரர்களிடம், இண்டலிஜென்ட் அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை முடிந்த பின்னரே அவர் செய்தியாளர்களை சந்திக்க அனுமதிக்கபடுவார்.

அப்போது, அவர் தனக்கு அங்கு என்னென்ன  நடந்தது என்ன பேசினோம், எப்படி நடத்தப் பட்டோம் என அனுமதிக்கப்பட்ட விவரங்களை மட்டுமே அவர் மீடியாக்கள் முன்பு தெரியப்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி